Pierrefitte : குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் உடல்

by Editor
0 comment

வீதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து இறந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பையை எடுக்க வந்த துப்புரவு ஊழியர்கள் இறந்த குழந்தையின் உடலைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7:30 Pierrefitte (Seine-Saint-Denis)-யில் உள்ள Rue de Paris-இல் குப்பைத்தொட்டியில் ஒரு பையில் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளங் குழந்தையின் உடலை குப்பை சேகரிக்கும் துப்புரவு ஊழியர்கள் கண்டுள்ளனர். உடனே காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து தடவியல் சோதனைகளை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராவில், ஒரு பெண் அதிகாலை 3 மணியளவில் குப்பையை கிளறுவதையும், அதில் குழந்தையின் உடலைக் கண்டு பயந்து ஓடுவதையும் காவல்துறையினர் கண்டுள்ளனர்.

குழந்தை எப்போது, எப்படி இறந்தது, வீசப்படும்போது உயிருடன் இருந்ததா என்பது உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech