Versailles: Carte Vitale விவரங்களை குறுஞ்செய்தி மூலம் திருடியவர்களுக்கு சிறை

by Editor
0 comment

Carte Vitale அட்டையின் தனிப்பட்ட விவரங்களை குறுஞ்செய்தி மூலம் திருடியதாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

37 வயது பெண்ணுக்கு பதினைந்து மாத சிறைத்தண்டனையும், 40 வயது தோழிக்கு 10 மாத சிறைத் தண்டனையும் விதித்து வெர்சாய்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

Carte Vitale அட்டை காலாவதியாக போகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பி, பயனர்களின் விவரங்களை திருடி மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஏமாந்தவர்கள் ‘உங்கள் Carte Vitale அட்டையை புதுப்பியுங்கள்’ என்று குறுஞ்செய்தியில் அனுப்பப்பட்ட இணைப்பை கிளிக் செய்துள்ளனர். அதன் வழியாக சில விவரங்களை பதிவு செய்துள்ளனர். பின்னர் சமூக பாதுகாப்பு அலுவலர் (Social Security Agent) போல நடித்த நபர் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்டு பெற்றுள்ளனர்.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் இதே போன்று ஒருவருக்கு அவருடைய வங்கி அட்டை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வந்த அழைப்பை அடுத்து போலி வங்கி அதிகாரியாக நடித்தவர் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே சென்று அவரது அட்டையை பெற்றுள்ளார். அதன் மூலம் கிட்டத்தட்ட 4000 € மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் புகாரையடுத்து சிசிடிவி மூலம் ஆய்வு செய்து மோசடி செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech