Le Havre-வில் (Seine-Maritime) ஒரே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக அரசு வழக்கறிஞர் புருனோ டியூடோன்னே கடந்த திங்களன்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முதல் நபருக்கு வயது 33. சம்பவம் நடந்தபோது அவர் கூச்சலிட்டதால் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அவருக்கு உதவியுள்ளனர். 70 வயதான இரண்டாவது நபர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபரிடம் போராடியுள்ளார். அவரை மீட்டு அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்தில் சேர்த்துள்ளனர். இருப்பினும் அவரை அந்த நபர் பின் தொடர்ந்துள்ளார். குற்றவாளியை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அவரை கட்டி வைத்துள்ளனர். அந்நபர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைதானவர். அவர்கள் இருவரும் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு காவல் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.