பிரான்ஸ் நாடு பற்றிய முக்கிய தகவல்கள்

by Editor
0 comment

பிரான்ஸ் நாடு உலகளவில் பொருளாதார தரத்தில்  5 வது இடத்தில் உள்ள நாடு.   ஐரோப்பாவில் ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகள் போல மிக முக்கியமான நாடு. மனித உரிமை, கல்வி தரம், தொழில்நுட்ப வளர்ச்சி (மின்னணு துறை, கப்பல கட்டுதல், மருத்துவ துறை…) போன்றவற்றில் மிக புகழ் பெற்ற நாடு.

இந்த நாட்டை பற்றிய சில முக்கிய தகவல்கள் :

தலைநகரம் (la capitale) : பாரிஸ்

மொத்த கிராம-நகரங்கள் (les nombres de villes/villages) : 36000
மாவட்டங்கள் (les départements) : 101 (கடல் பகுதி மாவட்டங்களையும் சேர்த்து)
மாநிலங்கள் (les régions) : 22 (புதியது : 13)
பணம் (la monnaie): ஈரோ

சதுர பரப்பளவு (la superficie) : 632 834 சதுர கிலோமீட்டர்

தேசிய கொடி (le drapeau national) : மூவண்ண (நீளம், வெள்ளை, சிவப்பு) கொடி
தேசிய கீதம் (l’hymne nationale) : லா மர்செயஸ் (la marseillaise)
தேசிய குறிக்கோள் (la devise) : சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

தேசிய நாள் (la fête nationale)  : 14 ஜூலை

மொழி (la langue)  : பிரெஞ்ச் (பிரான்சே)

தற்போதைய  குடியரசு தலைவர் (le président actuel) :  பிரான்சுவா ஹோலந்த் (François HOLLANDE)
தற்போதைய  பிரதம மந்திரி (le premier ministre actuel) : மனுவல் வால்ஸ் (Manuel VALLS)

ஆட்சி முறை (la régime politique) : குடியரசு
கீழ் சபை உறுப்பினர் எண்ணிக்கை (les députés à l’Assemblée nationale) : 577
மேல் சபை உறுப்பினர் எண்ணிக்கை (les sénateurs au Sénat)  : 348

மொத்த மக்கள் தொகை (la population totale) : 6,58 கோடி
ஆண்கள் (les hommes) : 3.23 கோடி
பெண்கள் (les femmes) : 3.35 கோடி

மொத்த உள்நாட்டு உற்பத்தி (PIB) : 2121 மிலியர் ஈரோ (212100 கோடி ஈரோ)

வேலையில்லாதவர் சதவீதம் (le taux de chômage): 10,3%

தகவல்: BONTAMIL.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech