பிரான்சின் முக்கிய இரயில் வண்டி நிலையங்களில் ஒன்றான கார் தி நோர் (Gare de Nord) பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை தயாரித்த பிரான்சுவா (François Pinchon) என்பவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய இரயில் நிலையங்களில் ஒன்றான கார் தி நோர், பெரும் ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய சிக்கல்களாக அவர் குறிப்பிட்டுள்ளவை :
யூரோ ஸ்டார் நடைபாலத்தில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு
தண்டவாளங்களில் கான்கிரீட் தொகுதிகள் விழும் வாய்ப்புகள்.
மேல் தளத்திலுள்ள H & K வழித்தடங்கள் கீழேயுள்ள RER B & D-யில் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள்
இந்த அறிக்கையை தயாரித்தவர் கார் தி நோரை நவீனமயமாக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னாள் நிறுவனமான StatioNord-வின் வல்லுநர் ஆவார்.
SNCF மற்றும் StationNord நிறுவனங்களுக்கிடையே வணிக நீதிமன்றத்திலும், நிர்வாக நீதிமன்றத்திலும் சட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
SNCF ஒப்பந்தத்தை மீறியதாக 350 மில்லியன் யூரோக்களை நஷ்ட ஈடாக StatioNord கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை வெளிப்படுத்திய தகவல்கள் சரியானதாக இருந்தால், இரயில் நிலையத்தை நாள்தோறும் பயன்படுத்தும் 600,000 பேரில் பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.