பருவகால காய்ச்சலுக்கு எதிராக இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
பருவகால காய்ச்சலை தடுக்க போடப்படும் Grippe தடுப்பூசியினை, ஆண்டுதோறும் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசியுடன் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டும் என்று பிரான்சின் சுகாதார ஆணையம் பரிந்துரைந்துள்ளது. இருப்பினும், இதை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை.
இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி இதுவரை நோயின் கடுமையான தாக்கத்தில் உள்ளவர்களுக்கு, முக்கியமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இணை நோய்கள் ஏற்பட்டால் பரிந்துரைக்கப்படுகிறது.
பருவகால காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை 2 முதல் 17 வயது வரையிலான இணை நோய்கள் இல்லாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தடுப்பூசி அட்டவணையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சுகாதார ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து போன்ற பல நாடுகள் ஏற்கனவே இதை தேர்வு செய்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் வயதான உறவினர்களிடையே வைரஸ் பரவுவதற்கு ஒரு முக்கியமான இனப்பெருக்க இடமாக உள்ளனர்,
ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான சிறார்களின் தனிப்பட்ட ஆர்வத்தை கேள்விக்குட்படுத்துகின்றனர்.
பெரிய அளவிலான பல அண்மை ஆய்வுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், தற்போதுள்ள தடுப்பூசிகள் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் நன்கு செயலாற்றுகின்றன, பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று எச்.ஏ.எஸ் முடிவு செய்தது.
பெரும்பாலான சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருப்பதாக H.A.S. கூறுகிறது. அண்மையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளஞ்சிறார்களின் கணிசமான எண்ணிக்கையை மேற்கோள் காட்டுகின்றது H.A.S.
பயன்படுத்தப்படும் ஐந்து தடுப்பு மருந்துகள் :
Fluarix Tetra®
Vaxigrip Tetra®
Influvac Tetra®
Fluenz Tetra®
Flucelvax®
இருப்பினும், மூக்கில் மருந்து போல் அடிக்கக்கூடிய இந்த தடுப்பு மருந்துகளில் ‘Fluenz Tetra®’ பிரெஞ்சு சுகாதார ஆணையம் பரிந்துரைக்கிறது. சாதாரணமாக மூக்கில் தெளிக்கக்கூடிய இம்மருந்தை குழந்தைகளும், பெற்றோர்களும் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளது.
பிரான்சில் இந்த குளிர்காலத்தில் 15 வயதிற்குட்பட்ட 9 குழந்தைகளின் இறப்பு “இன்ஃப்ளூயன்சாவினால் நேரடியாக அல்லது மரணத்தை உருவாக்க கூடிய வகையில் ஏற்பட்டுள்ளது” என்று பிரான்சின் பொது சுகாதார துறை, புதன்கிழமை வெளியிட்ட அதன் வாராந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில், இலையுதிர்காலத்தின் துவக்கத்திலிருந்து இதுவரை 97 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.