144
பாரிசிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து பெண்ணின் உடல் பாகங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Buttes-Chaumont பூங்காவில் காவல்துறையினர் நடத்திய தேடுதலில் பைகளில் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த இளம்பெண்ணின் பல உடல் அங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருகிலிருந்த தண்டவாளத்தின் அருகே அவருடைய தலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இளம்பெண்ணின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. பாரிஸ் காவல்துறையினர் இக்கொலை தொடர்பாக விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
இதன்பின்னர் Buttes-Chaumont பூங்கா மூடப்பட்டுள்ளது.