வன்முறை சம்பவங்களை நிறுத்தும்படி கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி வேண்டுகோள்

by Editor
0 comment

பிரான்சில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வன்முறையை நிறுத்துமாறு கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘வன்முறையில் ஈடுபடுபவர்களே! நான் உடனடியாக நிறுத்த வேண்டுகிறேன். நீங்கள் ஜன்னல்களையோ, பள்ளிகளையோ, பேருந்துகளையோ உடைக்காதீர்கள். தாய்மார்கள் தான் பேருந்தில் செல்கிறார்கள், தாய்மார்கள் தான் வெளியே நடமாடுகிறார்கள்!’ என்று நயேலின் பாட்டி நதியா பிரெஞ்சு தொலைக்காட்சியின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘இளையோர்கள் அமைதியாக இருக்கும்படி வேண்டுகிறேன். நயேல் இறந்துவிட்டான். என் மகளுக்கு ஒரே குழந்தை இருந்தான், அவன் இறந்து விட்டான். என் மகளின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர்கள் என் பேரனையும், மகளையும் இழக்க செய்துவிட்டார்கள். நான் சோர்ந்துவிட்டேன்’ 

‘நான் உடல் நலம் குன்றியுள்ளேன். என் பேரனை என்னிடமிருந்து அந்த காவலர் பறித்துவிட்டார். எல்லோரையும் போல அவர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். கலவரத்தில் ஈடுபடுபவர்கள், காவல்துறையினரை தாக்குபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். நான் நீதியை நம்புகிறேன். எனக்கு நீதியின் மேல் நம்பிக்கையுள்ளது’ என்று கூறியுள்ளார்.

நயேல் எனும் பதின் வயது இளைஞர் கடந்த செவ்வாய்கிழமை நாந்தேர் ரயில் நிலையம் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்த போது, போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட காவலர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார்.

இதனையடுத்து, கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காவல்துறையுடன் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அரசு அலுவலகங்களையும், வணிக நிறுவனங்களையும் சூறையாடி, தீயிட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech