திருமணம் நடத்துவதற்கு இனி ஆயிரம் யூரோக்கள் வைப்புத் தொகையாக பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று ஒல்னே-சு-புவா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமணங்களின் போது நடைபெறும் வேண்ட தகாத சம்பவங்களால் இந்த வைப்புத் தொகை கட்டாயமாக பெறப்படுகிறது என்று ஒல்னே-சு-புவாவின் நகர மன்றத் தலைவர் புருனோ பெசிஷா தெரிவித்துள்ளார்.
‘குழந்தைகள் தெரியாமல் பொருட்களை உடைப்பது பரவாயில்லை, ஆனால், 20 வயது நபர் தெரிந்தே சேதத்தை விளைவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நகர மன்றத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் வான வேடிக்கைகளை வெடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருமண நிகழ்வுகளின் போது நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படும் சேதங்கள், அழிவுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் தாமதங்களை தடுக்கவே இந்த வைப்பு தொகை பெறப்படுகிறது.