பிரான்சின் முன்னணி நாளிதழின் இரகசிய விவரங்களை இணையத்தில் விற்க முயன்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நாளிதழான லெ மோந்த் (Le Monde) ஊடகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை டார்க் வெப் எனப்படும் வலையக பிணைப்பில் விற்க முயன்றுள்ளார்.
சுமார் 2800 ஊழியர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். லெ மோந்த் குழுமத்தின் இணையத்திற்குள் திருட்டுத்தனமாக நுழைந்த அந்த இளைஞர் அனைத்து தகவல்களையும் சேகரித்து ஒரு கோப்பினை தயாரித்து அதை போலியான பெயரில் விற்க முனைந்துள்ளார்.
அவரை Villiers-Saint-Frédéric எனும் ஊரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவலில் தனது குற்றத்தை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் அவர் விசாரணைக்கு பாரீஸ் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.