பாரிசில் 2018 ஆம் ஆண்டு நடந்த வழக்கின்போது போலி ஆவணங்களை சமர்பித்ததற்காக இரண்டு வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (ஜனவரி 23, 2023) Xavier nogueras மற்றும் Joseph Cohen-sabban ஆகிய இரு வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்பித்ததற்காக வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை மாற்றி பெறுவதற்கான குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைமருந்து கடத்தல் தொடர்பான வழக்கு
பிரபல போதை மருந்து கடத்தல்காரரான Robert Dawes, வெனிசுலாவில் இருந்து ஒரு டன்னுக்கும் அதிகமான cocaine போதைப்பொருளை பாரிஸ் மற்றும் caracas இடையிலான விமான பயணத்தில் கடத்த முயற்சித்திருந்தார்.
அதுத்தொடர்பாக வழக்கு தொடங்கப்பட்ட 2018-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், தங்கள் கட்சிக்காரருடைய தொலைபேசி அழைப்புகள் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறி மனுதாரர் ராபர்ட் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர்களான Nogueras-வும் Cohen-sabban-னும் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
வழக்கறிஞர்கள் ஆவணங்களை சமர்ப்பித்த கணமே அவை போலியானவை என்று நீதிமன்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டது . குற்றவாளி Robert க்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், சமர்ப்பிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மீதான வழக்கு விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது. இதன் பிறகு அந்த போலி ஆவணங்கள் ராபர்ட் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களால் சமர்பிக்கப்பட்டதென்று தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட இரு வழக்குரைஞர்களும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.