செலவுகளை ஈடுகட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 3 பில்லியன் € தேவை

by Editor
0 comment

விலைவாசி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோக்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

‘இதுவரை அரசு மருத்துவமனைகளில் இப்படியொரு பொருளாதார நெருக்கடியான நிலை இருந்ததில்லை. இந்த வருடத்தை சமாளிக்க மேலும் 3 பில்லியன் யூரோக்கள் கூடுதலாக தேவை’ என பிரான்ஸ் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பளங்கள் உயர்த்தப்படுவதாலும், விலைவாசி உயர்வாலும் மருத்துவனைகளின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஒரு பில்லியன் யூரோக்களும், ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒரு பில்லியன் யூரோக்களும் தேவை என்று அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு போனஸ் அளிக்கவும், நிரந்தர இரவு நேர பணியாளர்களை கூடுதலாக நியமிக்கவும் மேலும் 700 மில்லியன் யூரோக்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரெஞ்சு மருத்துவமனைகள் கூட்டமைப்பின் கணிப்பு படி, வருகின்ற 2024-ஆம் ஆண்டில் தேசிய மருத்துவமனைகளின் சுகாதார காப்பீட்டின் செலவு 5 சதவிகிதம் அல்லது 5 பில்லியன் யூரோக்கள் உயரும் என்றும், 2023-ஆம் ஆண்டிற்கு கூடுதலாக 500 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என்றும் அறிய முடிகிறது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech