பாரிசின் புறநகர் பகுதியான Rueil-Malmaison-யில் வெள்ளி இரவன்று 17வது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 83 avenue du 18 Juin 1940 என்னும் முகவரியில் வசித்து வந்த 17 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு விரைந்த அவசர சேவை பிரிவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
கொலை நடைபெற்ற நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மூவர் வெளியேறியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதே இரவில் இன்னொரு நபரும் கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் உடனடியாக சூரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒருவேளை இருவரும் சகோதரர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை எடுத்து வருகின்றனர்.