155
Valence (Drôme) நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் பதினாறு வயது இளைஞர் காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட முயன்றவர் தப்பியோடிவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை எட்டு மணியளவில் Rue Giuseppe-Verdi-யில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நடைபெற்ற சோதனையில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.