துலோன் நகரில் பணி விடுப்பில் இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுத்தொடர்பாக பன்னிரெண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துலோன் நகரின் நடுவிலுள்ள Place-d’Armes பகுதியில் அதிகாலை 1:40 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. சுமார் பத்து பேர் கொண்ட கும்பல் மூன்று காவலர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. அவசர மருத்துவ சேவையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒருவருக்கு கை மூட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்னொருவருக்கு முகத்திலும், வாயிலும், மற்றவருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவருடைய கைபேசியும் திருடப்பட்டுள்ளது.
காவலர்களை தாக்கியவர்கள் யார் என்ற விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.