கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் இழப்பீட்டை பெறவும் துரிதப்படுத்தவும் கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற 116 006 எனும் எண்ணிற்கு அழைக்கலாம்.
கலவரத்தின் போது கிட்டத்தட்ட 5600 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாகன காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட விபத்து திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காப்பீட்டு தொகையை வழங்குகின்றன.
ஒருவேளை காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாதவர்கள் CIVI மூலம் இழப்பீடு பெற முயற்சிக்கலாம்.
இதனடிப்படையில் அதிகபட்ச இழப்பீடாக ஒருவர் 4601 யூரோக்கள் வரை பெற முடியும்.