189
கடந்த 2020-ஆம் ஆண்டு குடிபோதையிலிருந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குற்றமிழைத்த 25 வயதான நபர் தனது சகோதரரை பையின் கயிறால் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றதோடு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியால் சகோதரரின் வயிற்றில் குத்தி அவரை கொலை செய்தார். ஜனவரி ஆறாம் தேதி விசாரணைக்கு வந்த இக்கொலை வழக்கை விசாரித்த போபிக்னி நீதிமன்றம் குற்றவாளிக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.