192
ஒல்னேசுபுவாவில் முன்னாள் குற்றவாளியான நபரொருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.,
ஒல்னே-சு-புவாவின் பழைய நகரப்பகுதியில் மாலை வேளையில் 52 வயதுள்ள அந்நபர் ஒரு மதுவகத்திலிருந்து வெளியே வரும்போது அடையாளம் தெரியாத நபர்களால் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபரின் பெயர் அப்தெர்ரசாக் தமானி என்றும், 2008ஆம் ஆண்டு அவரும் அவர் சகாக்களும் இணைந்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரை கடத்தி பணம் கேட்டபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும், கடத்தல் குற்றத்திற்காக பதிமூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் என்றும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.