208
பாரிஸ், Saint-Germain-des-Prés-யில் உள்ள Paris-Cité University-யில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Paris-Cité பல்கலைக்கழகத்தின் ஏழாவது மாடியில் மாணவி ஒருவர் நிறைய கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்திற்கு உடனே விரைந்த அவசர சேவை குழு அவருக்கு மருத்துவ முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்தியால் குத்திய நபர் Vanves-Malakoff இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.