145
Suresnes அருகே இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் துப்பாக்கி சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் மூன்றரை மணியளவில் Suresnes-இல் உள்ள ஒரு மதுவகத்திற்கு வெளியே ஆறு கொண்ட கும்பல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அதில் ஏற்பட்ட சிக்கலில் இருவர் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் காயமடைந்துள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இதுத் தொடர்பான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விசாரணை துவங்கப்பட்டுள்ளது.