அடையாளம் தெரியாத நபரை சுட்டுக்கொன்றதாக காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மாலை பாரிசின் 11வது மாவட்டத்தில் இரவு எட்டுமணியளவில் Place de la République பகுதியில் காவல்சுற்று பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் சந்தேகத்திற்கிடமான மனிதரை தடுத்து நிறுத்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர் காவலர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். உடனடியாக காவலர்கள் இருவரை அவரை சுட்டுள்ளனர். ஒரு காவலர் ஒரு முறை, மற்றொருவர் மூன்று முறை என நான்கு முறை அந்நபரை துப்பாக்கியால் சுட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இரு காவலர்களையும் உடனடியாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட நபர் காவலர்களை கைத்துப்பாக்கியாலும், நாயை ஏவ முயன்றும் மிரட்டியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
அரசுப்பணியிலிருப்பவர் மீது கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபட்டு எதிர்பாராமல் இறப்பு நிகழ்தல் என இச்சம்பவத்தின் மீது இரண்டு விசாரணைகள் துவங்கப்பட்டுள்ளன.