135
லா குர்னேவிலுள்ள 8 மே 1945 மெட்ரோ நிறுத்தம் அருகே வாலிபரை சூழ்ந்த கும்பல் செல்போனை தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளது. அவர் தர மறுத்ததால் ஐந்து பேர் கும்பல் அவரை கண்ணீர் புகை தெளிப்பானால் தாக்கி, நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர்.
கத்திக்குத்தால் கடுமையாக காயமடைந்த வாலிபர் தள்ளாடியபடியே நடந்து சென்று அருகிலிருந்த உணவகத்தில் உதவி கேட்டுள்ளார். அடுத்ததாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி இரண்டாம் தேதி மாலையில் அந்த வாலிபர் வீட்டிற்கும் செல்லும் வழியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.