123
காவலரின் துப்பாக்கி சூட்டில் இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட கலவரத்தையடுத்து பாதுகாப்பு பணியில் நாற்பதாயிரம் காவலர்களும், ஷாந்தார்ம் காவலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் 9000 காவலர்கள் ஏற்கனவே பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘கலவரத்தை அடக்கி, அமைதியை நிலைநாட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கலவரத்தில் ஈடுபடும் அரசியல் அமைப்பினரும் பொது நலன் கருதி அமைதியாக செல்ல வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.