காவலர்களுடன் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி இளைஞரை சுட்டுக்கொன்ற பிரெஞ்சு காவலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாந்தேரில் (Nanterre (Hauts-de-Seine) கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தில், பதினேழு வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாகன சோதனையின் போது காவலர்களின் உத்தரவை மீறு காரை ஓட்ட எத்தனித்த இளைஞர் அங்கிருந்த காவலர் மீது இடித்துள்ளார். இதனைக் கண்ட மற்றொரு காவலர் பாதுகாப்பு கருதி அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் உயிரழந்தார்.
‘ஆயுதத்தை கையாளும் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை’ என அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர் கைது செய்யப்பட்டால் தான் எவ்வித குறுக்கீடுமின்றி வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.