கலவரம், வன்முறை, தீ வைப்பு, கைது : பாதிப்புகள் என்னென்ன?

by Editor
0 comment

கடந்த ஆறு நாள் இரவுகளில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, 3300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்ஜீரிய பதின் வயதினரான நயேல் என்பவரின் மரணத்தையொட்டி பிரான்ஸ் முழுதும் பெரியளவில் வன்முறைகள், கலவரங்கள் ஏற்பட்டன. அவர் இறந்த ஜூன் 27 முதல் இன்று வரை கிட்டத்தட்ட ஆறு இரவுகளாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5,662 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 

பாரிசிலுள்ள காவல் தலைமையகங்கள் மீது 1282 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 3354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1282 பேர் பாரிஸ் காவல் நிலைய எல்லைக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 3354 பேரில் 3200 பேர் இது வரை எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாதவர்கள்’ என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானின் ரெய்ம்ஸ் சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.

‘கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சராசரி வயது பதினேழு. காவல் நிலையங்கள் மேல் நடைபெற்ற 254 தாக்குதல்களில் 722 காவலர்கள் காயமடைந்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு இரவுகளாக வன்முறை சம்பவங்கள் பெருமளவு குறைந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 297 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, 34 கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech