44 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பிரான்ஸ் முடிவு

by Editor
0 comment

மத்தியதரைக்கடலில் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரை நாடுகடத்த பிரன்ஸ் முடிவுசெய்துள்ளது.

நடுக்கடலில் தவித்த புலம்பெயர்ந்தோர்
நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை Ocean Viking என்னும் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்று மீட்டது. அந்த புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி தன் நாட்டில் இடமளிக்காததால், அவர்களை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முன்வந்தது.

நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள்
ஆனால், மீட்கப்பட்ட அந்த 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான ஜெரால்டு தர்மனான் (Gerald Darmanin) தெரிவித்துள்ளார்.

22 6374800524caf
Gerald Darmanin

இது குறித்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், அந்த 44 புலம்பெயர்ந்தோரின் உடல் நலம் சீரானதும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்றார்.

மேலும், மற்றவர்களின் புகலிடக்கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், யாருடைய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமோ, அவர்களும் நாடுகடத்தப்படக்கூடும் என்றார்.  

தகவல் : NEWS.LANKASRI.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech