உக்ரைன் போர் : ஆசிய நாடுகளை கண்டித்த பிரான்ஸ் அதிபர்!

by Editor
0 comment

உக்ரைன் போரும் ஆசிய நாடுகளின் பிரச்சனை தான் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் உக்ரைன் போர், ஆசியநாடுகளின் பிரச்சனை தான் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டின் போது பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ‘‘உக்ரைன் – ரஷ்யா போர் ஆசிய நாடுகளின் பிரச்சனையும் தான். இந்த மோதலுக்கு எதிராக அதிகரிக்கும் ஒருமித்த கருத்துடன் நாம் இணைய வேண்டும்.

உக்ரைனில் அமைதிக்கு பங்களிப்பதே பிரான்சின் முதன்மையான முன்னுரிமை. உலகளாவிய உறுதியற்ற தன்மைக்கு போர் முக்கிய ஆதாரமாக இருப்பதால், ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க உலகநாடுகள் ஒண்றினைய வேண்டும். உலகளாவிய ஸ்திரமின்மையின்மைகான முக்கிய ஆதாரமாக போர் உள்ளது. போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும். வரும் மாதங்களில் சீனாவால் இவ்விவகாரத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வல்லரசு சண்டையால், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பிரான்ஸ் சமநிலைப்படுத்தும் சக்தியாக உள்ளது. நாம் அடர்ந்த காட்டில் இருக்கிறோம். இங்கு சீனா, அமெரிக்கா என இரண்டு பெரிய காட்டு யானைகள் உள்ளன. தைவானின் எதிர்காலம், மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் சீனாவின் அதிகரித்துவரும் உறுதிப்பாடு ஆகியவற்றில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் சமநிலைப்படுத்தும் செயலுக்கான அழைப்பு விடுக்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.

தகவல்: TAMIL.SAMAYAM.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech