ஊழல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் தண்டனை காலத்தை பாதியாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிரான்சின் முன்னாள் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோசி.
கடந்த 2012-ஆம் ஆண்டு இவருடைய ஆட்சி காலத்தில் தேர்தல் பரப்புரைக்காக சட்டத்திற்கு புறம்பாக அதிகளவு நிதி செலவழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
22.5 மில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட வேண்டிய நிலையில், அவர் சுமார் 43 மில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் நிதி செலவின விவகாரங்களில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பிரான்ஸ் நாட்டில் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வழக்கை விசாரித்த கீழ்மை நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு, பாரிஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிக்கோலஸ் சர்கோசியின்குற்றத்தை உறுதி செய்ததோடு, தண்டனை காலத்தை ஆறு மாதமாக குறைத்து தீர்ப்பளித்தனர்.
மேலும் அவர் சிறைக்கு செல்ல மாட்டார். மாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட வீட்டுச் சிறையில் இருப்பார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல் பிரான்ஸ் குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் சர்கோசி என்பது குறிப்பிடத்தக்கது.
2007 பதவிக்காலத்தில் முன்னாள் லிபிய அதிபர் கடாபியிடம் முறைகேடாக தேர்தல் நிதி பெற்றதாக நிக்கோலஸ் சர்க்கோசி மேல் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டு விசாரணைக்கு வருகின்றது.