இளைஞரின் தலையில் துப்பாக்கியால் சுட்ட கும்பல்

by Editor
0 comment

நாந்த் (Nantes) நகரத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞரின் தலையில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நகரின் மையப் பகுதியில் 29 வயதான அல்ஜீரிய இளைஞர் ஒருவர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடையதாக ஐந்து பேர் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் இருவர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

படுகாயமடைந்தத நபர் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech