139
44 வயதான பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை அவரது முன்னாள் கணவரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
கத்தியால் தாக்கியதில் அந்த பெண்ணுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த அவசர சேவையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதான அந்நபர் கடும் மது போதையில் இருந்துள்ளார். அவருக்கு முழுவதும் போதை தெளிந்த பிறகு விசாரணையை தொடர காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.