பாரிசின் பத்தாவது வட்டத்தில் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாகக் கூறி கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கார் த லெஸ்ட் (Gare de l’Est) பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் தனது மனைவியுடன் வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது அவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
உடனடியாக அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்த காவல்துறையினர், அங்கு கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த அவரின் மனைவியை மீட்டு அவசர சேவையினர் உதவியுடன் முதலுதவி அளிக்க முயன்றனர். ஆனால் அவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 38.
இதனையடுத்து சரணடைந்த பெண்ணின் கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கணவர் அல்லது முன்னாள் கணவரால் கொலை செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட 20% அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 122 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.