கடந்த புதன்கிழமை 30 வயது இளம்பெண் ஒருவர் அவர் வீட்டின் வாசலிலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்த அதே வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் Vaulx-en-Velin அருகே இக்கொலைச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த பெண் மார்பில் குத்தப்பட்டு, அவர் வசிக்கும் கட்டிடத்தின் நுழைவாயிலிலே மயங்கி விழுந்துள்ளார். உதவிக்கு வந்த ஒரு நபர் அவருக்கு முதலுதவி அளிக்க முயன்றுள்ளார். பின்னர் Edouard-Herriot மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நினையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் விடியற்காலை 3 மணியளவில் மரணமடைந்தார்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் போதையிலிருந்ததோடு, கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டார்.
Rhône காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும்.