வேலை இழப்பால் அமெரிக்காவில் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

by Editor
0 comment

கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் தங்கள் விசாவை நீட்டிக்க புதிதாக பணியில் சேர கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.

அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்டின் செய்தி படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் 30 – 40 % பேர் இந்தியர்கள் எனவும், அவர்கள் H-1 B, L1 விசாக்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

H1B விசா விதிகளின் படி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை அவர்கள் தொழில்நுட்ப திறன்களின் அடிப்படையில் தங்களுக்கு ஊழியர்களாக பணியமர்த்த முடியும். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை ஒவ்வொரு வருடமும் இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து பணிக்கு எடுக்கின்றன.

L1-A மற்றும் L1-B விசாக்களின் படி நிர்வாக பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் குறிப்பிட்ட துறையில் அறிஞர்களாக இருப்பவர்கள் நிறுவனங்களை மாற்றி, தற்காலிகமாக பணி செய்ய முடியும்.

அமெரிக்காவில் குடிபெயர்வு அனுமதி இல்லாத (non-immigrant) H1B, L1 விசாக்களில் இருக்கும் கணிசமான இந்திய ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கவும், விசாவை நீட்டிக்கவும் அடுத்த சில மாதங்களுக்குள் வேறு வேலைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

H1B விசாவில் இருப்பவர்கள் அடுத்த 60 நாட்களில் புதிய வேலைகளில் சேர வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பும் நிலை ஏற்படும்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech