கடும் வெப்ப அலை காரணமாக 17 மாவட்டங்களுக்கும் இடி மின்னலினால் 25 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைக்காக சிவப்பு எச்சரிக்கை 17 மாவட்டங்களுக்கும், ஆரஞ்சு எச்சரிக்கை 39 மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இடி-மின்னல் கன மழையின் காரணமாக வடமேற்கு பகுதிகளில் 25 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
🔴 17 départements en Rouge
— VigiMétéoFrance (@VigiMeteoFrance) August 24, 2023
🔶 60 départements en Orange et l'Andorre pic.twitter.com/ci5G7jvVEP
நேற்று பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் உச்சக்கட்ட வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள மொத்தம் 60 மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு இடி-மின்னல் காரணமாகவும், 29 மாவட்டங்களுக்கு வெப்ப அலை காரணமாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச வெப்பமாக நேற்று தேசிய அளவில் சராசரியாக 27.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.