அரசை ஏமாற்றும் வகையில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த Yvelines மற்றும் Seine-Saint-Denis-யிலிருக்கும் இரு கண் மற்றும் சுகாதார மையங்களின் பதிவினை அரசின் சமூக பாதுகாப்பு (Social Security) துறை நீக்கியுள்ளது.
‘இந்த இரண்டு மையங்களும் போலி இரசீகளை வழங்கியுள்ளன, மேலும் போலியான காரணங்களை குறிப்பிட்டு அதற்கான இரசீதுகளை உருவாக்கியுள்ளன’ என தேசிய சுகாதார காப்பீடு நிதியகம் (Cnam) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த இரு மையங்களும் Trappes (Yvelines) மற்றும் Blanc-Mesnil (Seine-Saint-Denis)-யில் செயல்பட்டு வந்துள்ளன. இந்த சுகாதார மையங்களால் இதுவரை கிட்டத்தட்ட 1.5 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘88 பல் மருத்துவ மையங்களும், 44 கண் மருத்துவ மையங்களும் சுகாதார காப்பீட்டு நிதியகத்தால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’ என்று ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.