காருக்குள் புகுந்த நபரொருவர் காரின் உரிமையாளரை சாலையில் தள்ளி விட்டு காரை கடத்த முயன்ற சம்பவம் Saint-Ouen-இல் நடைபெற்றுள்ளது.
Seine-Saint-Denis-யிலுள்ள Saint-Ouen-வில் சாலை சிக்னலில் வந்து நின்ற ஒரு காருக்குள் வலிய நுழைந்த நபர் ஒருவர் காரின் ஓட்டுநரை சாலையில் தள்ளி காரை கடத்த முயன்றுள்ளார். காரில் இணைக்கப்பட்டிருந்த இருக்கை பட்டையுடன் சாலையில் விழுந்த காரின் உரிமையாளர் சுமார் பத்து மீட்டர் வரை சாலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் உடனே அவரை மீட்டுள்ளனர். 40 வயதான காரின் உரிமையாளருக்கு காலில் அடிபட்டுள்ளது. பாரிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காரை கடத்தியவரை வேறொரு இடத்தில் சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.