இத்தாலியில் வரலாறு காணாத கடும் ஆலங்கட்டி மழை

by Editor
0 comment

இத்தாலியின் சில நகரங்களில் பெய்து வரும் ஆலங்கட்டி மழையில் வரலாறு காணாத அளவிற்கு 19 செ.மீ. அளவில் ஆலங்கட்டிகள் பதிவாகியிருக்கின்றன.

இத்தாலியின் வடகிழக்கு நகரமான அசானோ தெசிமோவில் நேற்றிரவு பெரும் பனிக்கட்டிகள் மழையாக பொழிந்துள்ளதாக ஐரோப்பிய வானியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 16 செ.மீ. அளவு ஆலங்கட்டிகளை கார்மிங்னானோ நகரம் பதிவு செய்த நிலையில், இம்முறை 19 செ.மீ. அளவில் ஆலங்கட்டிகள் பெய்து அசானோ தெசிமோ சாதனைப் படைத்திருக்கின்றது.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவிலுள்ள விவியன் நகரனில் கடந்த 2010-ஆம் ஆண்டு விழுந்த 20.3 அளவிலான ஆலங்கட்டியே உலகின் மிகப்பெரிய ஆலங்கட்டியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

European hail record broken again in mere 5 days: 19cm hailstone confirmed in Italy! Less than a week after setting a…

Posted by European Severe Storms Laboratory on Tuesday, July 25, 2023

இருப்பினும், அண்மை நாட்களாக பெய்து வரும் ஆலங்கட்டி மழைகளினால் பல வீடுகள் பாதிப்படைந்துள்ளன. 

5 மி.மீ.க்கும் பெரிய அளவுள்ள பனிக்கட்டிகள் ‘ஆலங்கட்டி’ என அழைக்கப்படுகின்றன. பொதுவாக, மேகங்களுக்குள் சேரும் பனிக்கட்டிகள், கட்டிகளாகி மழையாக பொழிகின்றன. கடும் புயலும் ஆலங்கட்டிகளை உருவாக்குகின்ற என பிரான்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு 2022-ஆம் ஆண்டு 1334 முறை ஆலங்கட்டி மழை பொழிந்து வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech