தென்கொரியாவின் தலைநகர் சியோலின் அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கடையில் இருந்த நபர்களை திடீரென்று கத்தியால் தாக்கிய அந்த நபர், அதோடு தன்னுடைய காரை இயக்கி தெருவில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீதும் மோதியுள்ளார்.
இதில் கத்திக்குத்தில் ஒன்பது பேரும், காரைக்கொண்டு மோதியதில் ஐந்து பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் எட்டு பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புந்தாங் நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி இதே போன்று தலைநகர் சியோலில் கத்திக்குத்து தாக்குதல் நடந்ததும், அதில் ஒருவர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.