இளைஞர் பலி எதிரொலி : ஒன்பது மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தம்

by Editor
0 comment

பிரான்சில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் இன்று (வியாழக்கிழமை) இரவு ஒன்பது மணிக்கு மேல் பேருந்து மற்றும் டிராம் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக இல்-தே-பிரான்சின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

‘கலவரச்சூழலில் மக்கள் இரவு நேரத்தில் பயணிப்பது பாதுகாப்பானதல்ல. பொதுப்போக்குவரத்து வாகனங்களை தாக்குபவர்களை கைது செய்யுமாறு காவல்துறை தலைமையகத்தை கோரியுள்ளேன். நமது ஓட்டுநர்களையும், பயணிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று இல்-தே-பிரான்சின் மாநில தலைவர் வலேரி கூறியுள்ளார்.

க்ளமார் (Clamart) எனுமிடத்தில் நேற்றிரவு T6 டிராம் தீக்கிரையாக்கப்பட்டது. இதனையடுத்தே இன்று இரவு நேர போக்குவரத்து நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech