அவலோன் நகர மேயர் கைது!

by Special Correspondent
0 comment

அவலோன் (Avallon) நகர மேயர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மேயர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரான்சின் மத்திய – கிழக்கு பகுதியில் Bourgogne-Franche-Comte மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அவலோன் எனும் நகரத்தில் 6,000 மக்கள் வசித்து வருகின்றனர். அவ்வூரின் மேயராக இருந்து வருபவர் ஜமீலா ஹபாசுய் (Jamilah Habsaoui)

கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் Avallon நகர மேயராகவும், நகர மன்ற உறுப்பினராகவும் உள்ள Habsaoui மீதான போதைப் பொருள் கடத்தல் தொடர்பான முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி அவருடைய வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து,  பிரெஞ்சு காவல்துறையினரால் ஜமீலா ஹபாசுய் கைது செய்யப்பட்டார்.

Habsaoui மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தை வாங்கியதாகவும், ஆனால், அவர் அங்கு வசிப்பதில்லை என்றும் உள்ளூர் L’Yonne Republicaine செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவலோன் Avallon நகர மன்ற அலுவலகத்தையும் சோதனை செய்தனர்.

Auxerre நகர அரசு வழக்கறிஞர் Hugues de Phily மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் இருவர் Habsaoui-யின் சகோதரர்கள் ஆவர்.

அவர்களிடமிருந்து 983 கிராம் கோகைன், € 7,000 ($ 7,600) ரொக்கம் மற்றும் சுமார் 20 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech